உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராமேஸ்வரம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

 ராமேஸ்வரம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சேதுமாதவர் சன்னதி திறந்ததும், சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. நேற்று வைகுண்ட ஏகாதசி யொட்டி ராமேஸ்வரம் கோயில் இருந்து பல்லாக்கில் பெருமாள், பூதேவி புறப்பாடாகி சேதுமாதவர் சன்னதி முன்பு எழுந்தருளினர். பின் மகா தீபாராதனை நடந்ததும், சேதுமாதவர் சன்னதி திறந்ததும், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பின் மகாஅலங்காரத்தில் காட்சியளித்த சேதுமாதவருக்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ