உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதி பகுதி வயல்களில் மீண்டும் முளைக்கத் துவங்கிய நெற்பயிர்கள்

கமுதி பகுதி வயல்களில் மீண்டும் முளைக்கத் துவங்கிய நெற்பயிர்கள்

கமுதி : கமுதி பகுதியில் விளைந்த நிலையில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் மீண்டும் முளைக்கத் துவங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கமுதி தாலுகாவில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நெல், மிளகாய், சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழையால் நெற்பயிர்கள் நன்கு வளர்ந்தது. விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வந்தனர்.கமுதி அருகே முஸ்டகுறிச்சி, சம்பக்குளம், நகரத்தார் குறிச்சி, பசும்பொன், முத்தாலங்குளம், நாராயணபுரம், முதல்நாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.இரண்டு நாட்களுக்கு முன் கமுதி வட்டாரத்தில் பெய்த மழையால் நெற்பயிர்கள் மூழ்கியது. தண்ணீரில் மூழ்கிய நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.முத்தாலங்குளம் விவசாயிகள் கூறியதாவது:கமுதி தாலுகாவில் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழையால் நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாகியது. இதனால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து முழுமையாக இழப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்களில் பெறப்பட்ட பயிர் கடனை திருப்பி செலுத்த வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு கூட்டுறவு பயிர் கடனை தள்ளுபடி செய்யவும், இழப்பீடு வழங்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ