உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பனை தொழிலாளர் வாழ்வாதார மாநாடு; பரமக்குடியில் பிப்.15ல் நடக்கிறது

பனை தொழிலாளர் வாழ்வாதார மாநாடு; பரமக்குடியில் பிப்.15ல் நடக்கிறது

பரமக்குடி : பனைமர தொழிலாளர்களின் வாழ்வாதார மாநாடு பிப்.15 ல் பரமக்குடியில் நடக்கிறது.காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் சிறப்பு பேரவை கூட்டம் பரமக்குடியில் நடந்தது. மாவட்ட செயலாளர் மலைச்சாமி தலைமை வகித்தார்.கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள்:சுதந்திரத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் 55 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது 7 கோடி பனை மரங்கள் உள்ளதாக கதர் கிராமவாரிய கணக்கெடுப்பு கூறுகிறது. உலகில் எங்கும் பனை மரத்திலிருந்து கள் இறக்க தடை இல்லாத நிலையில் 108 நாடுகளில் கள் உணவுப் பொருளாக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.நுங்கு, பனங்கிழங்கு, பதநீர், கருப்பட்டி, கற்கண்டு என உணவுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்யவும் பனை பயன்படுகிறது. பனை ஒரு பல்லுயிர் பெருக்கமாக விளங்குகின்றது. பனங்கள் குழந்தைகளுக்கு சேனை கொடுப்பது முதல் பெரியவர்கள் வரை உண்ணும் உணவாக இருந்தது. கேரள அரசு உணவுப் பட்டியலில் கள் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 1987 ஜன.1ல் தடை செய்யப்பட்டது ஏன். தமிழகத்தில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் டாஸ்மாக் நிறுவனம் தனியார் முதலாளிகளுக்கு லாபம் ஈட்டும் நிலை உள்ளது. தென்னை மரத்திலிருந்து நீரா பானம் இறக்க அரசாணை வெளியிட்டது போல் பனங்கள் இறக்க அரசாணை வெளியிட வேண்டும். இதனை வலியுறுத்தி ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 5 லோக்சபா தொகுதிகளை உள்ளடக்கி பரமக்குடியில் பிப்.15ல் வாழ்வாதார மாநாடு நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் முனியசாமி, சஞ்சய்காந்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை