உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் துாக்கு பாலப்பணிகள் ரயில்வே வாரிய தலைவர் ஆய்வு

பாம்பன் துாக்கு பாலப்பணிகள் ரயில்வே வாரிய தலைவர் ஆய்வு

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் புதிய ரயில் துாக்கு பாலம் கட்டுமானப் பணிகளை ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹா ஆய்வு செய்தார்.ரூ.535 கோடியில் அமையும் இப்பாலம் கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் முடிந்த நிலையில் தற்போது துாக்கு பாலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இப்பணிகளை நேற்று ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹா நேற்று காரில் பாம்பன் வந்து புதிய பாலம் மற்றும் துாக்கு பாலத்தை ஆய்வு செய்தார். பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ராமேஸ்வரத்தில் ரூ.92 கோடியில் அமைக்கப்படும் புதிய ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், முதன்மை நிர்வாக அலுவலர் அமித்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை