உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் பாலத்தை ரயில்வே கூடுதல் பொது மேலாளர் அக்.14 ல் ஆய்வு

பாம்பன் பாலத்தை ரயில்வே கூடுதல் பொது மேலாளர் அக்.14 ல் ஆய்வு

ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அக்., 14 ல் ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் ஆய்வு செய்யவுள்ளார்.பாம்பன் பழைய பாலம் பழுதடைந்ததால் புதிய பாலம் அமைக்கும் பணிகள் 2020 ஆக., மாதம் ரூ. 550 கோடியில் துவங்கப்பட்டது. நுாற்றாண்டுகள் கடந்த பழைய பாம்பன் பாலம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 2022 டிச., 24 முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. பாம்பனில் நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்ட செங்குத்து துாக்குப்பாலம் பணிகள் நிறைவு பெற்று சில தினங்களுக்கு முன் சோதனைகளும் நடத்தப்பட்டது. பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.இந்நிலையில் பாம்பன் பாலப்பணிகளை தென்னக ரயில்வேயின் கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் அக்.,14 ல்ஆய்வு செய்ய உள்ளார் என ரயில்வே அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை