மேலும் செய்திகள்
திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
06-Dec-2024
கமுதி; ஓய்வூதிய திட்டத்தில் இணைப்பு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல் ஆகிய பல்வேறு கோரிக்கை தொடர்பான அரசாணை வெளியாகும் என எதிர்பார்த்துள்ளோம், என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் தெரிவித்தார்.கமுதி கோட்டைமேட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கல்வெட்டு திறப்பு விழா நடந்தது. ஒன்றிய தலைவர் குருமூர்த்தி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி, பி.டி.ஓ., சந்திரமோகன், மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் செல்வம் வரவேற்றார். மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் கல்வெட்டை திறந்து வைத்து அவர் கூறியதாவது, மாவட்ட அளவில் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் சங்கத்தின் கல்வெட்டு திறப்பு விழா, கொடியேற்றுதல் நடந்தது. ஊராட்சி செயலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழக அளவில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அரசால் ஏற்கப்பட்டு அது தொடர்பான அரசாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.இது தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை இயக்குநர், ஆணையர், தமிழக கூடுதல் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம், என்றார். உடன் மாநில இணைச்செயலாளர் ஜெயபாரதன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
06-Dec-2024