உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  விடுதியில் பாலியல் தொல்லை கலெக்டரிடம் பெற்றோர் புகார்

 விடுதியில் பாலியல் தொல்லை கலெக்டரிடம் பெற்றோர் புகார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு விடுதியில் பள்ளி மாணவனுக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். ராமநாதபுரம் அரசு உதவிபெறும் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர் டி-பிளாக் ரோடு அம்மா பூங்கா அருகேஉள்ள அரசு சமூகநீதி விடுதியில் தங்கியுள்ளார். அந்த மாணவரை 13, கடந்த நவ.10 விடுதியில் சக மாணவர்கள் தாக்கிய வீடியோ வலைதளத்தில் பரவியது. அதன்பின் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். தனது மகனுக்கு சக மாணவர்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாக கலெக்டர் அலுவலகத்தில் மாணவரின் தந்தை நேற்று புகார் அளித்தார். அவர் கூறியதாவது: என் மகனை விடுதியில் உள்ள சக மாணவர்கள் தாக்கியது வீடியோ பார்த்த பின் தான் தெரிய வந்தது. இது குறித்து மகனிடம் விசாரித்த போது விடுதியில் உள்ள 3 பேர் தினமும் இரவில் துாங்கவிடாமல் தண்ணீர் தெளித்து எழுப்பியதாகவும், கழிப்பறையில் நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஜாதிப் பெயரை கூறியும் தாக்கியதாக கூறினார். சம்பவம் குறித்து விடுதி காப்பாளரிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெற்றோரிடம் கூறக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எனது மகன் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளான். பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை