உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ்சில் செயல்படாத டிஜிட்டல் போர்டால் பயணிகள் குழப்பம்

பஸ்சில் செயல்படாத டிஜிட்டல் போர்டால் பயணிகள் குழப்பம்

திருவாடானை: அரசு பஸ்சின் பின்பக்கம் டிஜிட்டல் போர்டு செயல்படாததால் பஸ் எந்த ஊருக்கு செல்கிறது என்பது தெரியாமல் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.நேற்று அதிகாலை திருச்சி-ராமேஸ்வரம் செல்லும் டி.என். 63-1821 என்ற பதிவு எண் கொண்ட அரசு பஸ் திருவாடானை பஸ்ஸ்டாண்டில் நின்றது. பஸ்சின் பின்பக்கமாக உள்ள டிஜிட்டல் போர்டு செயல்படாமல் இருந்தது. பஸ் புறப்படும் நேரத்தில் சென்ற பயணிகள் அவசரமாக ஏறுவதற்காக போர்டை பார்த்தால் எந்த ஊருக்கு செல்கிறது என்று தெரியவில்லை.இதனால் சிலர் முன்பக்கமாக சென்றும், சிலர் பஸ்சில் அமர்ந்திருந்தவர்களிடம் கேட்டு தெரிந்தும் பஸ்சில் ஏறினர். இது குறித்து பயணிகள் கூறியதாவது:கோவை போன்ற பல நகரங்களில் தானியங்கி குரல் ஒலிப்பு கருவி மூலம் எந்த ஊருக்கு பஸ் செல்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த வசதியை அனைத்து நகரங்களுக்கும் செயல்படுத்த வேண்டும். படிக்க தெரியாதவர்கள் குரல் ஒலிப்பு சத்தம் கேட்டு பஸ்சில் ஏறி பயணம் செய்யலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை