உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பழைய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அவதி: தரைத்தளம் சேதம்; பஸ் இயக்குவதில் சிரமம்

பழைய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அவதி: தரைத்தளம் சேதம்; பஸ் இயக்குவதில் சிரமம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து அனைத்து பஸ்களும் இயக்கப்படுகிறது. அங்கு தரைத்தளம் சேதம், ஆக்கிரமிப்புகளால் பஸ் உள்ளே வந்துசெல்லும் போது நெரிசல் ஏற்படுகிறது. பயணிகள் நிற்க இடமின்றி சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய வெளி மாவட்டங்கள், உள்ளூர்களுக்கு 300க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டது. கட்டடம் பழுது, போதிய இடவசதியின்மை காரணமாக 2023 ஆக.,3 ல் ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நடக்கிறது. இதையடுத்து தற்போது பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அனைத்து பஸ்களும் இயக்கப்படுகினறன.ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் பஸ் ஸ்டாண்டில் ஏற்கனவே இடநெருக்கடியால் பஸ்கள் உள்ளே செல்லும் போதும், வெளிய வரும்போதும் ரயில்வே பீடர் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்நிலையில், பஸ் நுழைவுப்பகுதியில் வாகனங்களை நிறுத்த போலீசார் தடைவிதித்து அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதை மீறி அவ்விடத்தில் டூவீலர்களை நிறுத்துகின்றனர். பஸ் ஸ்டாண்ட் தரைத்தளம் பராமரிப்பின்றி சேதமடைந்து குண்டும்குழியுமாக உள்ளது. போதிய வெளிச்சமும் இல்லை. மழைநீர் தேங்கி நிற்பதால் வயதான பயணிகள் தவறி கீழே விழுகின்றனர். எனவே தடையை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் தரைத்தளத்தை உடனடியாக சீரமைக்க கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி