உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிடப்பில் வாறுகால் பணி அரசு நிதி வீணடிப்பு

கிடப்பில் வாறுகால் பணி அரசு நிதி வீணடிப்பு

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சி குத்துக்கல்வலசை செல்லும் வழியில் பல மாதங்களாக கிடப்பில் மழைநீர் சேகரிப்பு வாறுகால் பணிகள் உள்ளது.களிமண்குண்டு அருகே சட்டையன் வலசை ஊருணிக்கு செல்லக்கூடிய 200 மீ., நீளமுள்ள மழை நீர் செல்லக்கூடிய வாறுகால் பாதியுடன் பணிகள் முடிவு பெறாமல் உள்ளது. அவற்றில் கட்டுமான பணிகளுக்காக பொருத்தப்பட்ட இரும்பு கம்பிகள் அப்படியே துருப்பிடித்து வீணாகி வருகிறது.திருப்புல்லாணி யூனியன் பொறியாளர் பணி நடந்த இடத்தை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.எனவே உரிய முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிப்பதற்கான அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை