வரத்து கால்வாயில் சிறு பாலம் சேதமடைந்ததால் மக்கள் சிரமம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பெரியஇலை கிராமத்தில் முதல் தெரு வழியாக செல்லும் வரத்து கால்வாயில் சிறுபாலம் சேதமடைந்துள்ளதால் கடந்து செல்வதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துார் அருகே பெரியஇலை கிராமத்தில் முதல் தெருவில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கண்மாயில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு வரத்து கால்வாய் அமைக்கப்பட்டது.முதல் தெருவை கடந்து செல்லும் வழியில் சிறுபாலம் அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுபாலத்தில் சேதமடைந்து ஓட்டை விழுந்தது. இதனால் இவ்வழியே தெருவை கடந்து செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே வரத்து கால்வாயை கடந்து செல்லும் சிறுபாலத்தை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.