உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தாழ்வாக தொங்கும் உயர்அழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சம்

தாழ்வாக தொங்கும் உயர்அழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட உயர்அழுத்த மின்கம்பியால் கிராமமக்கள் அச்சப்படுகின்றனர். கிடாத்திருக்கை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு முதுகுளத்துார் துணைமின் நிலையத்திலிருந்து மின்வினியோகிக்க படுகிறது. கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பம் மற்றும் உயர் அழுத்த மின்கம்பி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கிராமத்தின் தெருக்களில் செல்லும் மின்கம்பி தாழ்வாகவும் கைக்கு எட்டி தொடும் துாரத்தில் செல்வதால் வாகனங்கள் செல்லவே சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களும் அச்சப்படுகின்றனர். மக்கள் கூறியதாவது,கிடாத்திருக்கை கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பம் உயர்அழுத்த மின்கம்பி அமைக்கப்பட்டது. தற்போது தாழ்வாக செல்வதால் ஆபத்தான நிலையில் உள்ளது. ஒருசில நேரங்களில் மின்கம்பி அறுந்து விழுகிறது.பின்பு அதிகாரிகள் சரி செய்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மின்வாரியத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் கிராமமக்கள் ஒன்று திரட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை