மேலும் செய்திகள்
கால்வாயில் இறந்து கிடந்த வாட்ச்மேன்
14-Aug-2025
ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் குடி யிருப்பு பகுதியில் உணவிற்காக குரங்குகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அவற்றை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் வனப்பகுதிகளில் போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பட்டணம்காத்தான், ராமநாதபுரம் நகர் பகுதிகளில் குரங்குகள் திரிகின்றன. இவை தென்னை மரங்களில் ஏறி காய்களை பறித்து சேதப்படுத்துகின்றன. நேற்று தினமலர் நகர், மதுரை ரோடு ஆகிய பகுதிகளில் இரு குரங்குகள் வீடுகளில் காம்பவுண்ட் சுவர், தென்னை மரங்களில் தாவி குதித்தன. இவை வீட்டிற்குள் வந்து விடுமோ என பெண்கள், சிறுவர்கள் அச்சமடைந்தனர். எனவே ராமநாதபுரம் குடியிருப்பு பகுதிகளில் திரியும் குரங்குகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.-------
14-Aug-2025