உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மண்டலமாணிக்கத்தில் மணல் குவாரி அமைக்க மக்கள் எதிர்ப்பு

மண்டலமாணிக்கத்தில் மணல் குவாரி அமைக்க மக்கள் எதிர்ப்பு

கமுதி: -கமுதி அருகே மண்டலமாணிக்கம் ஆற்றுப் படுகையில் மணல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். கமுதி அருகே மண்டலமாணிக்கம் ஆற்றுபடுகையில் மணல் குவாரி அமைக்க அரசு முயற்சித்து வருவதாக கிராம மக் களுக்கு தகவல் வந்தது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கமுதி தாலுகா அலுவலகம், கலெக்டரிடம் கிராம மக்கள் சார்பில் குவாரி அமைக்கக் கூடாது என மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் கிராமத்தில் மணல் குவாரி அளவீடு செய்வதற்காக பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவணபெருமாள், தாசில்தார் ஸ்ரீராம் உட்பட அதிகாரிகள் வந்துள்ளனர். குவாரி அமைப்பதற்கு இடத்தை ஆய்வு செய்வதற்காக வேறொரு வழியில் புதுக்குளம் செல்லும் ரோட்டில் சென்று ஆற்றுப் படுகைக்கு அதிகாரிகள் அளவீடு செய்துள்ள னர். இதனை அறிந்த மண்டலமாணிக்கம் கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மண்டலமாணிக்கம் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என மனு அளித்தனர். அதில் மணல் குவாரி அமைத்தால் கிராமத்திற்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும். விவசாயம் அழியும் நிலை உள்ளது. மணல் குவாரி அமைக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை