உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஏர்வாடியில் திட்டமிடாமல் பணி தரமற்ற ரோட்டில் மக்கள் அவதி

ஏர்வாடியில் திட்டமிடாமல் பணி தரமற்ற ரோட்டில் மக்கள் அவதி

கீழக்கரை: ஏர்வாடி ஊராட்சியில் உள்ள ஏர்வாடியில் இருந்து வடக்குத்தெரு பள்ளிவாசல் செல்லும் ரோடு தரமற்றதாகஇருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.ஏர்வாடி வடக்குத் தெருவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தார் ரோடு அமைக்கப்பட்டது.இந்தரோடு குண்டும் குழியுமாக இருந்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் 200 மீ., நீளத்திற்கு பிரதான தெருக்களில் அமைக்கப்படும் தார் ரோடு உயரம் அதிகரித்து பக்கவாட்டு பகுதிகளில் கழிவுநீர் தேங்கும் இடமாக மாறி வருகிறது.ஏர்வாடியை சேர்ந்த அம்ஜத் உசேன் கூறியதாவது:தற்போது அமைக்கப்பட்டு வரும் தார் ரோட்டின் இரு புறங்களிலும் அதிகளவு பள்ளம் உள்ளது. உயரத்தை அதிகப்படுத்தி பக்கவாட்டுப் பகுதிகளில் தாழ்வாக உள்ளதால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். வீடுகளின் கழிவு நீர் செல்லவழியின்றி தேங்கிகொசுக்கள் உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கடலாடி யூனியன் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஊராட்சி செயலரிடம் கேட்டதற்கு மேல் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என கூறுகிறார்.எனவே ரோடு அமைக்கும் ஒப்பந்ததாரருக்கு உரிய திட்டமிடல் வழங்கியும் அதிகாரிகள் பார்வையிட்டு தார் ரோடு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கலெக்டருக்கு புகார் மனு அளித்துள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !