உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பனில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி மக்கள் மனு

பாம்பனில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி மக்கள் மனு

ராமேஸ்வரம்,- ராமேஸ்வரம் அருகே பாம்பனில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி ரயில்வே வாரிய தலைவரிடம் மக்கள் மனு அளித்தனர்.நேற்று பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணியை ஆய்வு செய்த ரயில்வே வாரிய தலைவர் ஜெயாவர்மா சின்ஹாவிடம் பாம்பன் ஜமாத் நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் 1914ல் பாம்பனில் ரயில்வே ஸ்டேஷன் அமைத்ததும் மக்களின் பயன்பாட்டிற்கு நம்பர் 1 எனும் ரயில்வே கேட் அமைத்தனர். இங்கு 2007ல் அகல ரயில் பாதையாக அமைத்த போது இந்த கேட்டை அகற்றி ஸ்டேஷன் நடைமேடையை ஒரு மீட்டர் உயரத்திற்கு உயர்த்தினர். இதனால் ஸ்டேஷன் வடக்கு, தெற்கில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் கடந்து செல்ல முடியாமல் சிரமபடுகின்றனர். மேலும் சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றம் ஏற்பட்டால் அவசர காலத்தில் ரயில்வே ஸ்டேஷனை கடந்து செல்ல முடியாமல் பல மீட்ட்டர் துாரம் சுற்றிச்செல்ல வேண்டிய அவலம் உள்ளதால் பொதுமக்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே பழமையான ரயில்வே கேட் இருந்த இடத்தில் சுரங்க வழிப்பாதை அமைத்து தர வேண்டும் என கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ