மோகினி அவதாரத்தில் பெருமாள்
இன்று வைகுண்ட ஏகாதசிபரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் பகல் பத்து உற்ஸவத்தின் நிறைவு நாளான நேற்று மாலை மோகினி அவதாரத்தில் பெருமாள் வீதி உலா வந்தார்.இக்கோயிலில் டிச.31ல் துவங்கி பகல் பத்து உற்ஸவம் நடக்கிறது. தினமும் காலை பன்னிரு ஆழ்வார்களுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து, நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் வாசிக்கப்பட்டன.நேற்று மாலை பெருமாள் கையில் வீணை ஏந்தி மோகினி அவதாரத்தில் திருவீதி உலா வந்தார். தொடர்ந்து கோயிலை அடைந்ததும் நடை அடைக்கப்பட்டது. பெருமாள் சன்னதி வடக்கு நோக்கி இருப்பதால் பரமபத வாசல் வழியாக தினமும் பக்தர்கள் தரிசிக்கின்றனர். இதன்படி இன்று காலை 5:00 மணிக்கு பெருமாள் சர்வ அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.