உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பதிக்கப்பட்ட பைப் லைனில் தண்ணீர் வேண்டி மனு

பதிக்கப்பட்ட பைப் லைனில் தண்ணீர் வேண்டி மனு

சாயல்குடி; சாயல்குடி அருகே எஸ்.கீரந்தை ஊராட்சியில் பங்களாமேடு, நேதாஜி நகர் பகுதிகளில் கடந்த ஆண்டு குடிநீருக்காக பைப் லைன் பதிக்கப்பட்டது. பங்களா மேடு மற்றும் நேதாஜி நகர் பகுதிகளில் 500க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் வீடுகள் தோறும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்திற்காக பைப் லைன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஓராண்டுகளாக தண்ணீர் சப்ளை இன்றி காட்சி பொருளாகவே உள்ளது. இப்பகுதி மக்கள் தள்ளு வண்டியில் குடங்களுடன் தண்ணீருக்காக 2 கி.மீ., சென்று வருகின்றனர். நேற்று அப்பகுதிக்கு வந்த கடலாடி யூனியன் பி.டி.ஓ., ஜெயஆனந்திடம் கிராமத் தலைவர் மலைச்சாமி, சத்தியமூர்த்தி, பிள்ளையார்குளம் கதிரேசன் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் தண்ணீர் வேண்டி மனு கொடுத்தனர். கரூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் விரைவில் இரண்டு மாதங்களுக்குள் இப்பகுதியில் தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என பி.டி.ஓ., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி