கடலில் விழுந்த மீனவரை மீட்டுத் தரக்கோரி மனு
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் விழுந்த நிலையில் அவரை மீட்டுத் தர வேண்டும் எனக் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்தவர் அமிர்தய்யா. இவரது மகன் ஆரோக்கிய கிங்ஸ் 25, ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கிரிச்விட் என்பவரின் படகில் டிச.,6ல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். அன்று மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி கடலில் விழுந்துள்ளார். மீனவர்கள் அப்பகுதியில் 4 நாட்களாக தேடி வருகின்றனர். இந் நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் அமிர்தய்யா குடும்பத்தினருடன் வந்து நேற்று மனு அளித்தார். மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடலோர காவல் படையினருடன் இணைந்து கடலில் விழுந்த மீனவர்களை தேடி வருகிறோம். கடலில் விழுந்த மீன வரின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றனர்.