உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கச்சத்தீவு திருவிழா செல்ல இலவசமாக 100 லி., டீசல் கேட்டு அமைச்சரிடம் மனு

கச்சத்தீவு திருவிழா செல்ல இலவசமாக 100 லி., டீசல் கேட்டு அமைச்சரிடம் மனு

ராமேஸ்வரம், : -கச்சதீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவுக்கு நாட்டுப்படகில் செல்லும் மீனவர்களுக்கு இலவசமாக 100 லிட்டர் டீசல் வழங்க வேண்டும் என மீன்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.பிப்.23, 24ல் கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 70 விசைப்படகு, நாட்டுப்படகில் பக்தர்கள் செல்ல உள்ளனர். இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் வந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் எஸ்.பி.ராயப்பன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கச்சத்தீவு திருவிழாவுக்கு பாரம்பரியமாக நாட்டுப்படகில் மீனவர்கள் சென்று பங்கேற்று இருநாட்டு உறவுகளை மேம்படுத்தினர்.இதில் தொப்புள் கொடி உறவான இலங்கை பக்தர்களை சந்தித்து உணவுகளை பரிமாறிக் கொள்வர்.இந்நிலையில் நாட்டுப்படகு மீனவர்களின் பொருளாதார சூழ்நிலையால் கச்சத் தீவு திருவிழாவுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே விழாவுக்கு செல்லும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு இலவசமாக படகிற்கு 100 லி., வீதம் டீசல் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை