மேலும் செய்திகள்
போலீஸ்காரர் விபத்தில் காயம்
18-Jul-2025
ராமநாதபுரம்:திருவிழாவின் போது ஏற்பட்ட முன் விரோதத்தில், தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், வழுதுார் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், ஜூலை 5ல், முளைப்பாரி திருவிழா நடந்தது. அப்போது, வரவு -- செலவு சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, இரவு நடந்த கச்சேரி யில், ஜாதி ரீதியாக பாடல் பாட சிலர் வற்புறுத்தினர். தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு ராமநாதபுரம் ஒன்றிய அமைப்பாளர் கவுதம் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால், பிரபு என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, பிரபு, 32, அலெக்ஸ், 36, ரஞ்சித், 26, உள்ளிட்ட ஐவர் , நேற்று முன்தினம் இரவு கவுதம் வீட்டிற்கு சென்று கற்களை வீசி, வீட்டின் கண்ணாடியை உடைத்து மிரட்டல் விடுத்தனர். கவுதம், போலீசில் புகார் அளித்தார். மீண்டும் நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு வீட்டின் மீது மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில், வீட்டின் முன்பகுதியில் இருந்த சோபா, சேர் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Jul-2025