மூதாட்டியை கொன்றவரை கைது செய்யக் கோரி மறியல்
ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் மூதாட்டியை கொலை செய்த வழக்கில் குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அக்., 5ல் மண்டபம் முனைக்காடு சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி பேச்சியம்மாள் என்ற சின்னபொண்ணு 60. இவர் அன்று அதிகாலை பால் வியாபாரம் செய்தபோது, மர்மநபர்கள் மூதாட்டியை கொலை செய்து கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றனர். இக்கொலை தொடர்பாக இதுவரை குற்றவாளியை கைது செய்யாதது உறவினர்கள் அதிருப்தி அடைந்தனர்.இந்நிலையில் கொலையாளியை கைது செய்யக்கோரி நேற்று மாலை மண்டபத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அகில பாரத ஹிந்து மகாசபை நிர்வாகிகள், உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். பின்னர் போலீசார் சமரசம் செய்ததும் கலைந்து சென்றனர். இதனால் அரைமணிநேரம் போக்குவரத்து பாதித்தது.