குழாய் உடைப்பு சீரமைப்பு
திருவாடானை: திருவாடானை அருகே அழகமடை, செங்கமடை கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு அமைக்கபட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் சப்ளை செய்யபடுகிறது. கடந்த நான்கு நாட்களாக செங்கமடையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணானது. இதனால் தெருக்கள் மற்றும் வீடுகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமம் அடைந்தனர். இச்செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. அதனை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் குழாய் உடைப்பு சரி செய்யபட்டு, குடிநீர் வழங்கப்படுகிறது.