மேலும் செய்திகள்
என்.எஸ்.எஸ்., முகாம்
07-Oct-2025
சாயல்குடி: சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ்., சார்பில் 2000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன் முன்னிலை வகித்தார். சாயல்குடி அருகே இருவேலி கண்மாய் கரையின் உள்வாயில் பகுதியில் 2000 பனை விதைகள் நடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலுவலர் பாலமுருகன் செய்திருந்தார். இதே போல் மாவட்டத்தில் என்.எஸ்.எஸ்., சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 5000த்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது.
07-Oct-2025