உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பொது இடத்தில் மது அருந்துவதை தடுக்க போலீசார் ரோந்து: 50 வழக்குகள் பதிவு

பொது இடத்தில் மது அருந்துவதை தடுக்க போலீசார் ரோந்து: 50 வழக்குகள் பதிவு

திருவாடானை: திருவாடானை சப்-டிவிஷனில் பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க போலீசார் ரோந்து செல்லும் நிலையில் இரு மாதங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாடானை சப்- டிவிஷனில் திரு வாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, எஸ்.பி. பட்டினம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. கிராமப்புற பகுதி களில் பொது இடங் களில் மது அருந்துவதால் பிரச்னைகள், தகராறு ஏற்படுகிறது. பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் பொது இடங்களில் மது அருந்துவதைத் தடுக்கும் நோக்கில் சிறப்பு ரோந்து பணியில் ஈடு பட்டுள்ளனர். இப்பகுதிகளில் போலீசார் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தீவிர ரோந்து செல்கின்றனர். இது குறித்து திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் கூறிய தாவது: பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்கும் வகையில் கடந்த இரு மாதங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யபட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மது தொடர்பான குற்றங்கள் குறைந்துள்ளன. பொது இடங்களில் மது அருந்துதல் தொடர்பாக ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அருகில் உள்ள போலீஸ்ஸ்டேஷன்களில் அலைபேசி மூலம் புகார் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை