மீனவருக்கு உதவ தயார் நிலையில் போலீசார்
தொண்டி: ஆபத்தில் இருக்கும் மீனவர்களை மீட்க படகு மற்றும் கருவிகளுடன் மரைன் போலீசார் தயார் நிலையில் உள்ளனர். கடலில் ஆபத்தில் சிக்கும் மீனவர்களை பாதுகாக்க தேவிபட்டினம் மற்றும் தொண்டி மரைன் போலீசார் மீட்பு படகு மற்றும் கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர். இது குறித்து மரைன் போலீசார் கூறியதாவது: ஆபத்து காலங்களில் மீனவர்களை பாதுகாக்க மரைன் எஸ்.ஐ., அய்யனார் தலைமையில் 10 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களை மீட்க கடலோர மீட்பு படகுகள், தகவல் தொடர்பு சாதனங்கள், அவசரகால மிதவைகள் தயார் நிலையில் உள்ளன. ஆபத்தான காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரச காலங்களில் 1093 என்ற ெஹல்ப்லைன் அல்லது போலீஸ் ஸ்டேஷன்களை மீனவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.