மேலும் செய்திகள்
பா.ஜ.,வினர் அஞ்சலி
17-Aug-2025
தனியார் அஞ்சலகம்: விண்ணப்பிக்கலாம்
26-Jul-2025
மின் மயானத்தில் இல. கணேசன் உடல் தகனம்
16-Aug-2025
ராமநாதபுரம் : நாட்டின் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கும் சலுகையை ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் என அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் வலியுறுத்தியுள்ளனர். அகில இந்திய அஞ்சல்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. இதற்கு ராமநாதபுரம் மாவட்ட தலைவர் நாகநாராயணன் தலைமை வகித்தார். அதில் நாகலாந்து கவர்னர் இல.கணேசன் மறைவுக்கும், மறைந்த அஞ்சல் பணியாளர்களுக்கும்2 நிமிட அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஓய்வூதியம், பஞ்சப்படி வழங்குவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.செயலாளர் முஹம்மது இஸ்ஸதீன் கூறியதாவது: மத்திய அரசு பணியில் 2004க்கு பிறகு சேர்ந்தவர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். எம்.பி., எம்.எல்.ஏ.,க் களுக்கு உள்ளது போல் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பென்ஷன் கிடைக்க வேண்டும். அவர்களுக்கு கிடைக்கும் சிறப்பு சலுகை அனைத்தும் பென்ஷனர் களுக்கு வழங்க வேண்டும். எட்டாவது ஓய்வூதியக் குழு உடனே அமைத்து 2026 ஜன.,1ல் அமல் படுத்த வேண்டும். மெடிக்கல் அலவன்ஸ் ரூ.1000த்தை ரூ.5000 ஆக உயர்தத வேண்டும். கூடுதல் பென்ஷன் 20 சதவீதம் பெறுவதற்கான வயது 80 என்பதற்கு பதிலாக 65 வயதில் இருந்து படிப்படியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது என்றார். பொருளாளர் பற்குணன், உதவி செயலாளர் ரங்காச்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
17-Aug-2025
26-Jul-2025
16-Aug-2025