மின்தடை: பி.எஸ்.என்.எல்., கட் வாடிக்கையாளர்கள் அவதி
திருவாடானை: மின்தடை நேரங் களில் பி.எஸ்.என்.எல்., டவர் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் அவதியடைகின்றனர். பி.எஸ்.என்.எல்., குறைந்த விலையில் ரீசார்ஜ் வசதிகளை பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இருப்பினும் டவர் பிரச்னையால் வாடிக்கையாளர்கள் அவதியடைகின்றனர். திருவாடானை மக்கள் கூறுகையில், மின்தடை நேரங்களில் பி.எஸ்.என்.எல்., சிக்னல் கிடைப்பதில்லை. குறிப்பாக மாதாந்திர பராமரிப்பு நாள் அன்று காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை மின்சப்ளை நிறுத்தப்படுவதால் அன்றைய நாள் முழுவதும் பி.எஸ்.என்.எல்., டவர் கிடைக்காது. பேசிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்படுகிறது. புதிய திட்டங்களை பி.எஸ்.என்.எல்., அறிவித்து வருகிறது. ஆனால் நெட்வொர்க் இல்லாமல் அதை வாங்கி என்ன பயன். என்னதான் சிறப்பு சலுகைகள் அறிவித் தாலும் வாடிக்கையாளர் களால் பயன்படுத்த முடியாத நிலை தான் உள்ளது என்றனர்.