உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலாடி சந்தையில் மகளிர் சுய உதவி குழுவின் உற்பத்தி பொருள் விற்பனை

கடலாடி சந்தையில் மகளிர் சுய உதவி குழுவின் உற்பத்தி பொருள் விற்பனை

கடலாடி: கடலாடியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள் இயற்கை சந்தை விற்பனை நேற்று துவக்கப்பட்டது. மாவட்ட மேலாளர் தங்கபாண்டியன் துவக்கி வைத்தார்.கடலாடி மகளிர் திட்ட வட்டார மேலாளர் செந்தில் வேல் கூறியதாவது: மகளிர் திட்டம் சார்பில் நடந்த இந்த இயற்கை சந்தையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களது தோட்டத்தில் விளைவித்த காய்கறிகள், கீரைகள், காளான் மற்றும் பழ வகைகளை கொண்டு 12 விதமான கடைகளை அமைத்து விற்பனை செய்தனர்.சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பினாயில், சோப் ஆயில், கருவாடு, ஒயர் கூடைகள், பனங்கிழங்கு, நவதானிய இனிப்பு வகைகள் லாப நோக்கமின்றி குறைந்த விலையில் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் விற்கப்பட்டது என்றார்.வட்டார மேலாளர் சிவக்குமார் உட்பட மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். இது போன்று இயற்கை சந்தை கடலாடி, சாயல்குடி, கமுதி, முதுகுளத்துார் வட்டாரங்களில் நடக்க இருப்பதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை