மேலும் செய்திகள்
வண்ண வில்
13 minutes ago
வானவில் மன்ற போட்டிகள்
23 minutes ago
கூட்டுறவு வாரவிழா விருது பெற்றவர்களுக்கு பாராட்டு
26 minutes ago
ராமேஸ்வரம்: -ராமேஸ்வரத்திற்கு பெர்மிட் வழங்க வலியுறுத்தி பாம்பனில் ஆட்டோ டிரைவர்கள் ரோடு மறியல் செய்தனர். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம், பாம்பனில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளன. பயணிகளை ஏற்றிக்கொண்டு ராமேஸ்வரத்தில் இறக்கி விட்டு இங்குள்ள பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறி ராமேஸ்வரம் ஆட்டோ டிரைவர்கள் போலீசாரிடம் புகார் செய்தனர். நேற்று தங்கச்சிமடம், பாம்பனை சேர்ந்த 7 ஆட்டோக்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். இதனை கண்டித்தும், ராமேஸ்வரத்திற்கு ஆட்டோக்களை இயக்க பெர்மிட் வழங்க வலியுறுத்தி நேற்று பாம்பன் அருகே அக்காள் மடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ டிரைவர்கள் மறியல் செய்தனர். ராமேஸ்வரம் ஏ.எஸ்.பி., மீரா, ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி., சுப்பையா, ஆட்டோ டிரைவர்களிடம் சமரச பேச்சு நடத்தியதால் மறியலை வாபஸ் பெற்றனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
13 minutes ago
23 minutes ago
26 minutes ago