மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ராமநாதபுரம்; மாவட்டத்தில் 654 மகளிர் குழுக்களுக்கு ரூ.53 கோடியே 32 லட்சம்சுழல் நிதி கடன் திட்ட உதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. தமிழக துணை முதல்வர் உதயநிதி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்துறை சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை காணொளி வழியாக துவக்கி வைத்தார்.பட்டணம்காத்தானில் தனியார் மகாலில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் பரமக்குடி முருகேசன், திருவாடானை கருமாணிக்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இதில் 654 மகளிர் குழுக்களுக்கு ரூ.53 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் சுழல் நிதி கடன் திட்ட உதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கலெக்டர் பேசுகையில், கடந்த 2023--24ம் நிதியாண்டில் 10 ஆயிரத்து 600 குழுக்களில் இதுவரை 8830 குழுக்களுக்கு ரூ.605.13 கோடி, 2024--25ல் 8866 குழுக்களுக்கு ரூ.618.19 கோடி கடன் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என்றார். மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் ராஜலெட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மகளிர் திட்டத்துறை உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் குழுவினர் பங்கேற்றனர்.