மேலும் செய்திகள்
ரேஷன் கார்டு திருத்தம் செங்கையில் நாளை முகாம்
12-Sep-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தாலுகா வாரியாக ஒரு கிராமத்தில் நாளை (அக்.,11) பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மாதந்தோறும் 2--வது சனிக்கிழமை சூழற்சி முறையில் மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் ஒரு கிராமத்தில் பொது வினியோகத்திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது. இதன்படி நாளை கீழ்கண்ட இடங்களில் காலை 10:00மணிக்கு பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. தேவிபட்டினம் அருகே வெண்ணத்துார், திருவாடானை அருகே புல்லுார் கொடிபங்கு கிராமம், பார்த்திபனுார் அருகே பெருங்கரை, முதுகுளத்துார் மேலக்கொடுமலுார் அருகே தட்டான்குடியிருப்பு, பெருநாழி அருகே து.வாலசுப்பிரமணியபுரம், திருப்புல்லாணி அருகே நைனாமரைக்கான், சோழந்துார் அருகே தும்படைக்காகோட்டை ஆகிய இடங்களில் உள்ள ரேஷன்கடைகளில் முகாம் நடக்கிறது. கடலாடி அருகே தரைக்குடி உள்வட்டம் கொக்காடி மற்றும் ராமேஸ்வரம் ராமகிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் சமுதாய கட்டடத்திலும் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் மின்னணு ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்தல், பெயர் சேர்த்தல், பிழை திருத்தம், போட்டோ பதிவேற்றம், முகவரி மாற்றம், அலைபேசி எண் பதிவு செய்தல், புதிய ரேஷன் கார்டு, கடைக்கு வரமுடியாத மூத்தக்குடி மக்களுக்கான அங்கீகாரச்சான்று ஆகிய மனுக்கள் வழங்கலாம். ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பான குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
12-Sep-2025