உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் நிலத்தை அளவீடு செய்ய எஸ்.பி., யிடம் பொதுமக்கள் மனு 

கோயில் நிலத்தை அளவீடு செய்ய எஸ்.பி., யிடம் பொதுமக்கள் மனு 

ராமநாதபுரம்: வாலிநோக்கம் ஸ்ரீபட்டினம் காத்தார் என்ற சாத்த அய்யனார் கோயில் நிலத்தை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அளந்து தர வேண்டும் என எஸ்.பி., சந்தீஷிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:ஸ்ரீபட்டினம் காத்தார் என்ற சாத்த அய்யனார் கோயில் எங்களது குல தெய்வம். 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த கோயில் பக்தர்களாக உள்ளோம். பல்வேறு பகுதிகளிலிருந்து பங்குனி உத்திரம், சிவராத்திரி நாளன்று திருவிழா நடத்தி செல்வது வழக்கம்.கோயிலுக்கு சொந்தமான 2.90 ஏக்கர் நிலத்தில் நடுப்பகுதியில் கோயிலும், பீடமும் உள்ளது. மற்ற பகுதிகள் காலியிடங்களாக உள்ளன. இந்த இடங்களை தற்போது ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருகிறார்கள். கோயில் நிலத்திற்கு வேலி அமைக்க தங்களிடம் மனு கொடுத்தோம்.நடவடிக்கை இல்லாததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் 2.90 ஏக்கர் கோயில் நிலமாகும். அதனை அளந்து கொடுக்க வேண்டும் என 2022 ஆக., 4 ல் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின்படி கோயில் நிலத்தை அளவிடும் போது ஆட்சேபனை செய்து ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்தவர்கள் நிறுத்தி விட்டார்கள்.இதுவரை நிலத்தை அளவிடும் பணியை செய்யவில்லை. உயர் நீதிமன்றத்தில் கோயிலுக்கு சொந்தமான இடம் என உத்தரவிட்ட பிறகும் செயல்படுத்தப்படாமல் இருந்தது. பின் 2025 ஜூன் 23 ல் வருவாய்த்துறையினர் நிலத்தை அளந்து எல்லை அமைத்து தந்தனர்.அதன்படி அப்பகுதியில் வேலி அமைக்கப்பட்டது. இதனை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இது குறித்து வாலிநோக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இடையில் நிறுத்தப்பட்ட அளவிடும் பணியை நிறைவு செய்தும், கோயில் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும்.கோயில் பகுதியில் பக்தர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ