உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசுப் பணியாளர் தேர்வாணையம்  குரூப் 4 தேர்வு: 4495 பேர் ஆப்சென்ட்

அரசுப் பணியாளர் தேர்வாணையம்  குரூப் 4 தேர்வு: 4495 பேர் ஆப்சென்ட்

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 4 தேர்வில் 4495 பேர் தேர்வு எழுத வரவில்லை.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 பணிக்கு தேர்வுகள் நடந்தது. இதில் 9 தாலுகாவில் உள்ள 104 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. இதில் 29,126 பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். 24,631 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.இதில் 4495 பேர் தேர்வு எழுத வரவில்லை. 9 தாலுகாவிலும் சப் கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் தேர்வு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் இருந்த தேர்வு மையத்தை கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் பார்வையிட்டார். தேர்வுக்கு 115 ஆய்வு அலுவலர்களும், 28 நகர்வு குழு அலுவலர்களும், 11 பறக்கும் படைகளும் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் தேர்வு நடக்கும் பணியை 122 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் பதிவு செய்தனர். தேர்வு மையங்களில் தேர்வு எழுதுபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ