உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புரட்டாசி மாத பொங்கல் விழா

புரட்டாசி மாத பொங்கல் விழா

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் வீரமாகாளி அம்மன் கோயில் புரட்டாசி மாத பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் வீரமாகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. பருவ மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கிராம மக்கள் பொங்கல் வைத்து கும்மியடித்து சிறப்பு வழிபாடு, நேர்த்திக்கடன் செலுத்தினர். கீழச்சாக்குளம் நண்பர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ