உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வழிபாடு

பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வழிபாடு

திருப்புல்லாணி :புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கல்யாண ஜெகநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி உள்ளிட்டோருக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. * சிக்கல் அருகே கொத்தங்குளம் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. உற்ஸவமூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது. *முதுகுளத்துார் அருகே பொசுக்குடி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பெரும்பூஜை நடந்தது. பெருமாளுக்கு பால், சந்தனம்,மஞ்சள் உட்பட 21 வகை அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பெரும்பூஜையில் கோயில் முன்பு உள்ள கொடிமரத்திற்கு தயார் செய்து வைக்கப்பட்ட உணவு வகை வைத்து சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து வெள்ளி கவசம் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பீனிக்ஸ் பறவை நண்பர்கள் சார்பில் நாடகம் நடந்தது. * திருவாடானை அருகே குளத்துார் குலசேகரபெருமாள், தொண்டி உந்திபூத்தபெருமாள், பாண்டுகுடி லட்சுமிநாராயணபெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள் கோயில்களில் நேற்று புரட்டாசி கடைசி சனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தது. மலர், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ