மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலத்தில் சாரல் மழை
08-Nov-2025
ஆர்.எஸ்.மங்கலம்: கடந்த சில வாரங்களாக போக்கு காட்டி வரும் பருவமழையால் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் உரமிடும் பணியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் செப்., மாதத்தில் நெல் விதைப்பு செய்யப்பட்ட நிலையில் அக்., மாதம் பெய்த மழைக்கு நெற்பயிர்கள் முளைத்தன. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் முளைத்த நெற்பயிர்களை காப்பாற்றும் விதமாக வயல்களில் தேங்கிய தண்ணீரை விவசாயிகள் வெளியேற்றினர். அதன் பின் தொடர்ந்து மழையின்றி வறட்சி நிலவுவதால் நெற்பயிர்கள் ஈரப்பதம் இன்றி வெயிலில் வதங்கி வருகின்றன. பெரும்பாலான விவசாயிகள் நெற்பயிருக்கு இடையூறாக உள்ள களைகளை கட்டுப்படுத்தும் விதமாக களை பறித்தல், களைக்கொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளனர். நெற்பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக உரமிடும் பணியை மேற்கொள்வதற்கு விவசாயிகள் ஆயத்தமாக உள்ளனர். ஆனால் வயல்களில் தண்ணீர் இல்லாததால் உரமிடும் பணியை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். அவ்வப்போது மேக கூட்டங்கள் மழை பெய்வது போல் கூடுவதும், திடீரென கலைந்து செல்வதுமாக உள்ளதால் பருவமழையை எதிர்பார்த்து ஆர்.எஸ். மங்கலம் வட்டார விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
08-Nov-2025