தெருக்களில் தேங்கிய மழை நீர்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையால் தெருக்களில் தண்ணீர் தேங்கி யுள்ளதால் மக்கள் சிரமப்பட்டனர். முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது.நேற்று முதல் வானம் மேக மூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ocq09rdz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காக்கூர், செல்வநாயகபுரம், கடம்பன்குளம், வெண்ணீர்வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழை பெய்தது. ஒருசில கிராமங்களில் உழவு செய்யப்பட்டிருப்பதால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதிகமாக மாறியது.முதுகுளத்துார் -கடலாடி ரோடு தெருவில் தண்ணீர் குளம் போல் தேங்கி யுள்ளதால் வீட்டிலிருந்து வெளியில் வர முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். பள்ளி மாணவர்கள் நடந்து செல்லவே அவதிப் படுகின்றனர். எனவே வரும் காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.