உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் ஆக. 3ல் நடைசாத்தல்

ராமேஸ்வரத்தில் ஆக. 3ல் நடைசாத்தல்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு, ஆக.,3ல் கோயில் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருவிழாவின் 11 ம் நாளான ஆக., 3 ல் ஆடித்தபசை முன்னிட்டு, அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அதிகாலை 3 முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெறும். காலை 6 மணிக்கு பர்வதவர்த்தனி அம்பாள் கமல வாகனத்தில் ராமதீர்த்தம் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளளும், பகல் 11 மணிக்கு ராமநாதசுவாமி தங்கரிஷப வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளளும், பிற்பகல் 3 மணிக்கு சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் வைபவமும் நடைபெறும். இதையொட்டி, காலை 6 மணிக்கு அம்பாள் புறப்பாடு நடைபெற்ற பின், கோயில் நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து பூஜை வைபவங்கள் நடைபெறும், என கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்