உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தி.மு.க., ஆர்ப்பாட்டம் 884பேர் கைது

தி.மு.க., ஆர்ப்பாட்டம் 884பேர் கைது

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நேற்று தி.மு.க.,வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், 884பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி நேற்று காலை ராமநாதபுரத்தில் தி.மு.க.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோஷ்டி பூசல் காரணமாக, காலை 10.10 மணிக்கு நகர செயலாளர் ஆர்.ஜி.ரத்தினம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி., பவானி, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தலைவர் நல்லசேதுபதி, முன்னாள் கவுன்சிலர் சுபாஷ்சந்திரபோஸ், இரண்டு பெண்கள் உட்பட 58 பேரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலாளர் சுப.தங்கவேலன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரித்தீஷ்குமார் எம்.பி., சத்தியமூர்த்தி, மாநில இளைஞரணி துணை செயலாளர் சுப.சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ., முருகவேல் உட்பட 726 பேர் கைது செய்யப்பட்டு பிற்பகலில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்