உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகள் காலியிடத்தால் புரோக்கர்கள் ஆதிக்கம்

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகள் காலியிடத்தால் புரோக்கர்கள் ஆதிக்கம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லைசென்ஸ் வேண்டி விண்ணப்பிப்பவர்களிடம், வசூல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., பணியிடம் காலியாக உள்ளது. இரண்டு வாகன ஆய்வாளர்கள் இருந்த இடத்தில், தற்போது ஒருவரே உள்ளார். போதிய ஊழியர்கள் இல்லாததால் புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. 'எல்.எல்.ஆர்' எடுக்க கட்டணம் 60 ரூபாய். ஆனால் வசூலோ 300 ரூபாய். டிரைவிங் லைசென்ஸ் எடுக்க 300 ரூபாய்க்கு பதில் 800 ரூபாய் வாங்குகின்றனர்.பெர்மிட், எப்.சி.,க்கு வண்டியின் தரத்துக்கு ஏற்ப பல ஆயிரங்கள் கறந்து விடுகின்றனர். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் வலம் வருகின்றனர். இவர்களை மீறி நேரடியாக லைசென்ஸ் எடுக்க முடியவில்லை. மேலும் வாகன பயிற்சி பள்ளியில் படித்து, லைசென்ஸ் எடுக்க முடியாதவர்கள், புரோக்கர்களை அணுகினால் எளிதில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுவிடுகின்றனர்.கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்தது. அதன்பின் இதுவரை சோதனை நடக்கவில்லை. இதனால் புரோக்கர்கள் காலை 9.30 மணிக்கு வேலைக்கு வருவது போல் இங்கு வந்து விடுகின்றனர். எனவே மக்கள் நலன் கருதி, வசூல் வேட்டையில் ஈடுபடும் அதிகாரிகள், புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை முன்வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை