உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் சுவாமிநாத சுவாமி கோயில் முன்பு  பாதாள சாக்கடை கழிவு நீரால் பக்தர்கள் அவதி 

ராமநாதபுரம் சுவாமிநாத சுவாமி கோயில் முன்பு  பாதாள சாக்கடை கழிவு நீரால் பக்தர்கள் அவதி 

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் குண்டுக்கரை பகுதியில்சுவாமிநாத சுவாமி கோயில் வாசலில்மாதக்கணக்கில் பாதாள சாக்கடை கழிவுகள் ஓடுவதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு தினமும்நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகின்றனர். திருவிழா காலங்களில் பல ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். இந்த கோயில் வாசலில் பாதாள சாக்கடைகழிவு நீர் மாதக்கணக்கில் வெளியேறுகிறது. நகராட்சி அதிகாரிகள் இது குறித்து அலட்சியமாக உள்ளனர்.கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் துர்நாற்றத்தால் மூக்கைப் பிடித்துக் கொண்டே வரும் அவல நிலை உள்ளது. இதனால் பக்தர்கள் மனவேதனையடைகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாகநடவடிக்கை எடுத்து கோயில் முன்பு வெளியேறும் பாதாள சாக்கடை கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி