உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் வீதியெங்கும் பாலிதீன் கழிவுகளால் அவதி

ராமேஸ்வரத்தில் வீதியெங்கும் பாலிதீன் கழிவுகளால் அவதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பாலிதீன் புழக்கம் தாராளமாக உள்ளதால் வீதியெங்கும் பாலிதீன் குவிந்து கிடக்கிறது. இதனை உட்கொள்ளும் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.பாலிதீன் பை, கப்புகள் பயன்பாட்டால் மக்களுக்கு தீங்கு ஏற்படும் என்பதால் இதனை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் ராமேஸ்வரத்தில் நகராட்சி மார்க்கெட், ஓட்டல், டீக்கடைகள், காய்கறி, இறைச்சி கடைகளில் பாலிதீன் பை, கப்புகள் தாராளமாக புழக்கத்தில் உள்ளது. இந்த பாலிதீன் பைகளில் உணவு கழிவுகளுடன் சாலை ஓரம், வீதிகளில் குவிந்து கிடக்கிறது.மேலும் பாலிதீன் கழிவுகள் நகராட்சி மழைநீர் செல்லும் ஆறுகளில் அடைத்து கிடப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.ரோட்டோரத்தில் வீசப்பட்ட பாலிதீன் பையில் உள்ள உணவு கழிவுகளை ஆடு, மாடுகள் உட்கொள்வதால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதனை தடுக்காமல் நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதால் வியாபாரிகள் உற்சாகமாக விற்கின்றனர்.இனி வரும் நாட்களில் பாலிதீன் புழக்கத்தை தடுக்காவிடில் நிலத்தடி நீர் பாதித்து மக்களுக்கு தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை