உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரிய வகை பச்சோந்தி பிடிபட்டது

அரிய வகை பச்சோந்தி பிடிபட்டது

திருவாடானை: திருவாடானை தெற்கு தெருவில் குடியிருப்பு பகுதியில் திரிந்த அரிய வகை பச்சோந்தி பிடிக்கப் பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. திருவாடானை தெற்கு தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. நேற்று காலை அப்பகுதியில் அரிய வகையான பச்சோந்தி திரிந்தது. அடர்ந்த காட்டு பகுதிகளில் வசிக்கும் இந்த பச்சோந்தியை பார்த்து மக்கள் ஆச்சரியப் பட்டனர். இந்த வகையான பச்சோந்திகள் எதிரிகளிடம் இருந்து காத்துக் கொள்ள பக்கத்தில் இருக்கும் செடி, கொடிகளின் நிறத்தை போலவே தன்னுடைய நிறத்தையும் மாற்றிக் கொள்கின்றன. வனப் பகுதியில் மட்டுமே காணப்படும் இந்த பச்சோந்தியை குடியிருப்பு பகுதியில் பார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். பச்சை நிறத்தில் இருந்த பச்சோந்தியை இளைஞர்கள் பிடித்து வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை