கிராமப்புற நுாலகங்களுக்கு வாசகர்கள் வருகை குறைவு
திருப்புல்லாணி: ஆட்சிக்கு ஏற்றவாறு நாளிதழ்களை மாற்றும் போக்கு தொடர்வதால் மக்கள் விரும்பி படிக்கக்கூடிய நாளிதழ்கள் இடம் பெறாமல் உள்ளன. கிராமப்புற நுாலகங்களுக்கு வரக்கூடிய வாசகர்கள் வருகை குறைவாகவே உள்ளது. வாசகர்களை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களான ரெகுநாதபுரம், வண்ணாங்குண்டு, திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை உள்ளிட்ட பெருவாரியான கிராமங்களில் கிளை நுாலகம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நுாலகங்கள் இயங்கி வருகின்றன. வாசகர்கள் மற்றும் மாணவர்களை கவரும் வகையில் நடைமுறை திட்டங்கள் செயல்படுத்தினாலும் உரிய முறையில் விழிப்புணர்வு இல்லாததால் பெருவாரியான நுாலகங்கள் காற்றாடும் சூழ்நிலை நிலவுகிறது.ஆட்சிக்கு ஏற்றவாறு நாளிதழ்களை மாற்றும் போக்கு தொடர்வதால் மக்கள் விரும்பி படிக்கக்கூடிய நாளிதழ்கள் இடம் பெறாமல் உள்ளன. இதனால் நுாலகத்திற்கு வரக்கூடிய வாசகர்கள் வருகை குறைவாகவே உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பெயரளவிற்கு இயங்கக்கூடிய நுாலகங்களில் வாசகர்களை கவர விரும்பி படிக்கக்கூடிய நுால்கள், நாளிதழ்கள் வாங்கிடவும், பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.