உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டியில் மழையை எதிர்கொள்ள தயார்

தொண்டியில் மழையை எதிர்கொள்ள தயார்

தொண்டி: தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் மழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு தலைமை வகித்தார். தாசில்தார் அமர்நாத், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி, செயல் அலுவலர் திருப்பதி மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கனமழையை எதிர்கொள்ளும் விதமாக நீரை வெளியேற்றும் மோட்டார், மரம் அறுக்கும் மிஷின், சுகாதரத்திற்கு பிளிச்சிங் பவுடர் தயார் நிலையில் வைக்கப்பட்டது. 24 மணி நேரம் செயல்பட அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை