மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் ரோட்டில் மணல் வாகன ஓட்டிகள் அவதி
05-Jun-2025
ராமநாதபுரம்; ராமநாதபுரம் சின்னக்கடை வீதியில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளித்தனர்.ராமநாதபுரம் ஹாஜி செய்யது அலி ஆலிம் அறக்கட்டளை நிறுவனர் சையது, பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் நகராட்சி 33வது வார்டு சின்னக்கடை வீதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவற்றால் அதிகாலையில் பால்வண்டி, செய்தித்தாள் விநியோகம் செய்பவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இரவில் ரோட்டில் நடந்து செல்ல பெண்கள், சிறுவர்கள் அச்சப்படுகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.வெளிபட்டணத்தில் பள்ளி மாணவர்கள் செல்லும் வழியில் கைக்கொள்வார் தெருவில் சேதமடைந்துள்ள ரோட்டை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
05-Jun-2025