மேலும் செய்திகள்
சீரமைக்கப்பட்ட பள்ளி வகுப்பறைகள் திறப்பு
19-Nov-2024
ராமநாதபுரம்: சின்ன ஏர்வாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடத்தின் கூரை சேதமடைந்துள்ளதால் சீரமைக்க வேண்டும். அல்லது புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோர் வலியுறுத்தினர்.கடலாடி ஒன்றியம் சின்ன ஏர்வாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 130 மாணவர்கள் படிக்கின்றனர்.2003 - 2004 ல் கட்டிய 3 வகுப்பறைகள் தட்டோடு இல்லாமல் தண்ணீர் ஒழுகியதால் மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியவில்லை. 2016ல் கட்டிய 2 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன.இதனால் மரத்தடியில் மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை உள்ளது. பழைய வகுப்பறையில் கூரை சேதமடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும். புதிதாக பள்ளிக்கு வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
19-Nov-2024