உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டோரத்தில் மணல் குவியலால் விபத்து அபாயம்

ரோட்டோரத்தில் மணல் குவியலால் விபத்து அபாயம்

முதுகுளத்துார்: பூங்குளம் அருகே முதுகுளத்துார் - சாயல்குடி சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள மணல் குவியலால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.கீழச்சாக்குளம், பூங்குளம், ஒருவானேந்தல் உட்பட பல்வேறு கிராமங்களில் சாலையோரங்களில் புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. முதுகுளத்துார்-சாயல்குடி சாலை பூங்குளம் அருகே சாலையோரத்தில் தோண்டப்பட்டுள்ள மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரத்தில் மணல் குவியல் இருப்பது தெரியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கமுதி அருகே குழாய் பணியின் போது சாலையோரத்தில் மணல் குவியலால் விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது. எனவே எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். சாலையில் மணல் குவித்து வைக்காமல் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ