உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில்  புகையும் குப்பை  கிடங்கால் நோய்த்தொற்று அபாயம்

ராமநாதபுரத்தில்  புகையும் குப்பை  கிடங்கால் நோய்த்தொற்று அபாயம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி குப்பைக்கிடங்கில் தீப்பற்றிபுகை பரவுவதால் அருகே குடியிருப்பவர்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரம் கிழக்கு கடற்சாலையோரத்தில்நகராட்சி குப்பை கிடங்கு அமைந்துள்ளது. நகரில் 33 வார்டுகளில் மொத்தமாக சேகரிக்கப்படும் குப்பையை இங்கு குவித்துவைத்து தரம் பிரிக்கப்படுகிறது. இங்குள்ள குப்பையில் அடிக்கடி தீப்பிடித்து காற்றில் புகை பரவுகிறது. பட்டணம்காத்தான்பழைய சோதனைச்சாவடி, கீழசோத்துாரணி,கிழக்கு கடற்சாலை வரை புகை பரவுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகின்றனர்.எனவே தீயை அணைத்து புகையை கட்டுப்படுத்த நகராட்சிநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை